Homeசெய்திகள்இந்தியாஇந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மாணவர் அமைப்புகளுக்கு ராகுல் காந்தி தேநீர் விருந்து! தேர்தல் முறைகேடு விவகாரத்தில்...

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மாணவர் அமைப்புகளுக்கு ராகுல் காந்தி தேநீர் விருந்து! தேர்தல் முறைகேடு விவகாரத்தில் அடுத்தகட்ட ஆலோசனை!

-

- Advertisement -

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இன்று (அக்டோபர் 13) தேநீர் விருந்து அளிக்கிறார்.

we-r-hiring

டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.

ஜனநாயகத்திற்கான பேரணியைத் தொடர்ந்து சந்திப்பு

தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான புகார்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘ஜனநாயகத்திற்கான பேரணி’யில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பேரணியின்போது போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் முறைகேடுகள் மற்றும் SIR தொடர்பாகக் கூட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக் கூட்டு மனு

இந்த மனுவில் இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைமுறைகள் தொடர்பான தங்களது புகார்களை முன்வைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

அடுத்தகட்ட போராட்ட வியூகம் குறித்து ஆலோசனை?

தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ள இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் தடை! பாஜக அரசின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது – சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

MUST READ