மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லையா? அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் என்னுடம் நேருக்கு நேர் அரசியல் பற்றி விவாதிக்க தயாரா?, வந்தவாசி தொகுதியின் சி.வி.சண்முகமுகத்தின் தந்தை எம்.பியாக இருந்தவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் எம்.பியாக இருந்தவர். இது எல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?

எம்.ஜி.ஆர்க்கு பிறகு அதிமுகவை வழி நடத்தியது யார்? ஜெயலலிதா எத்தனை ஆண்டுகள் அதிமுகவில் உறுப்பினராக இருந்தார். ஜானகிஅம்மாள் அதிமுகவில் என்போது உறுப்பினராக இணைந்தார் எம்.ஜி.ஆர். பிறகு யார் தமிழகத்தில் அதிமுகவை வழி நடத்தியது? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுக்குழு மூலம் எடபாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது. யார் காலில் விழுந்து முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி வாங்கினார் என்பது அனைவருக்கு தெரியும். திமுக ஆட்சி அமைந்த ஒன்றைரை ஆண்டில் பெண்களுக்கு அதிக திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டில் பெண்களுக்கு பல திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ளார்” எனக் கூறினார்.
