Homeசெய்திகள்தமிழ்நாடுசவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து

-

- Advertisement -

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை திமிழக அரசு ரத்துசெய்துள்ளது. ​சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து​யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர்  (50) மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. ​சென்னை  காவல் ஆணையரால் கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த உத்தரவு, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம்  கீழ், அறிவுரை வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

​இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரின் தடுப்புக் காவலுக்கான காரணங்கள், அரசிடம் காவல் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் அது தொடர்பான ஆவணங்களை அறிவுரை வாரியம் விரிவாக ஆய்வு செய்தது. மேலும், சிறையில் உள்ள சவுக்கு சங்கரின் நேரடி வாக்குமூலத்தையும் வாரியம் கேட்டறிந்தது. ​அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்த அறிவுரை வாரியம், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்குப் போதிய காரணங்கள் இல்லை என்று ஒருமனதாகத் தெரிவித்தது.

we-r-hiring

​​அறிவுரை வாரியத்தின் இந்த ஒருமனதான முடிவை ஏற்று,  சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. ​சவுக்கு சங்கர் மீது வேறு ஏதேனும் வழக்குகள், பிற சட்டங்களின் கீழ் தடுப்புக் காவல் அல்லது நீதிமன்ற தண்டனைகள் நிலுவையில் இல்லாதபட்சத்தில், அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் அருண்ராஜ் உறுதி

MUST READ