Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்;...

முதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்; போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுக-வின் ‘Gen Z’ பிரிவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரைக் கைது செய்ய முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

முதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்; போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!​​கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த போடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரியப்பன் (திமுக விவசாய அணி மாநில துணைச் செயலாளர்). இவருடைய மகன் அன்பானந்தம், திமுக-வின் ‘Gen Z’ பிரிவின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

we-r-hiring

​இன்ஸ்டாகிராம் பதிவு & 5 பிரிவுகளில் வழக்கு
கடந்த ஜூன் 23-ஆம் தேதியன்று முதலமைச்சர் ஜோசப் விஜய், நடிகை த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து அன்பானந்தம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) அளித்த புகாரின் பேரில், அன்பானந்தம் மீது 5 பிரிவுகளின் கீழ் இராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

முதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்; போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!

​நீதிமன்ற வாசலில் போலீசாருடன் மோதல்
போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த அன்பானந்தம், இன்று தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைவதற்காகத் தனது வழக்கறிஞர்களுடன் வந்தார். அப்போது, நீதிமன்ற வாசலிலேயே காத்துக்கொண்டிருந்த போலீசார், அவரை நீதிமன்றத்திற்குள் செல்லவிடாமல் அங்கேயே கைது செய்ய முயன்றனர். இதற்கு அன்பானந்தத்தின் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே நீதிமன்ற வளாகத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர் நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

​ஒரு நாள் போலீஸ் காவல்
நீதிமன்றத்தில் சரணடைந்த அன்பானந்தத்தை, தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு வாதிடப்பட்டது. இதற்கு அன்பானந்தம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பானந்தத்தை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

முதல்வர் விஜய் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு: திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி நீதிமன்றத்தில் சரண்; போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!

​இளைஞர்களை ஒடுக்கும் தவெக அரசு: வழக்கறிஞர் குற்றச்சாட்டு
நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் அன்பானந்தத்தின் வழக்கறிஞர் அலீம் அல்புகாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய பொதுவான தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்யக்கூடாது என ஆந்திர நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவை நாங்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம். ஆனால், அதையும் மீறி போலீசார் இந்த வழக்கை அரசியல் நோக்கத்தோடு அணுகுகின்றனர். தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு, மாற்றுக் கருத்துடைய இளைஞர்களை ஒடுக்க வேண்டும், நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

மதுப்பிரியர்களுக்கு சிக்கல்- டாஸ்மாக் பணியாளர்கள் வரும் 10-ம் தேதி குடும்பத்தோடு போராடம்

MUST READ