Homeசெய்திகள்தமிழ்நாடுபொள்ளாச்சி–வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப் பயணிகள் குவியல்... முக்கிய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

பொள்ளாச்சி–வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப் பயணிகள் குவியல்… முக்கிய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

-

- Advertisement -

தமிழகத்தின் மிகவும் அழகிய மற்றும் சவாலான மலைச் சாலைப் பயணங்களில் ஒன்றாக விளங்கும் பொள்ளாச்சி – வால்பாறை மலைப்பாதையில், இதமான காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. மழைக்காலத்தைத் தொடர்ந்து பசுமை போர்த்திய மலைச்சரிவுகளும், கண்கொள்ளாக் காட்சிகளும் பயணிகளைச் சுண்டி இழுத்து வருகின்றன.பொள்ளாச்சி–வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப் பயணிகள் குவியல்... முக்கிய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

இயற்கை எழில் கொஞ்சும் 64 கி.மீ மலைப்பாதை
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வால்பாறையை அடைய, ஆழியாறு அணை அடிவாரப் பகுதியில் தொடங்கி ஆனைமலை மலைத்தொடரின் சரிவுகளை ஊடறுத்துச் செல்லும் இந்த மலைப்பாதை அமைந்துள்ளது. கடுமையான ஏற்றம், ஆழமான பள்ளத்தாக்குகள், தொடர்ச்சியான 40 கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் அடர்ந்த பசுமை நிறைந்த காடுகள் இச்சாலையின் தனிச்சிறப்பாகும். கண்கொள்ளாக் காட்சி (View Points): 40 கொண்டை ஊசி வளைவுகளின் பெரும்பாலான இடங்களில் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்தி, ஆழியாறு அணை, பரந்து விரிந்த தென்னந்தோப்புகள், ஆனைமலை மலைத்தொடர்கள் மற்றும் அடிவார சமவெளியின் ஒட்டுமொத்த அழகையும் ரசிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

we-r-hiring

சாலையோரங்களில் குரங்குகள், அரிய வகை பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை அவ்வப்போது காண முடிவதால், இயற்கை ஆர்வலர்களும் புகைப்படக் கலைஞர்களும் இங்கு அதிகளவில் குவிந்து வருகின்றனர். வால்பாறையில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், அவ்வப்போது மிதமான வெயிலும் என மிகவும் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால்,விடுமுறை நாட்கள் மட்டுமன்றி, சாதாரண நாட்களிலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குள்ள வியூ பாயிண்ட்கள், சோலையாறு உள்ளிட்ட அணைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பூங்காக்களைப் பார்வையிட்டு பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி–வால்பாறை 40 கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப் பயணிகள் குவியல்... முக்கிய எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் உள்ளூர் சிறு வணிகர்களின் வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள வேளையில், ஆபத்துகளைத் தவிர்க்க நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். “மலைச்சாலையில் தொடர்ச்சியான 40 கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் குறுகிய பாதைகள் இருப்பதால், எக்காரணம் கொண்டும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, வளைவுகளில் ஹார்ன் (Horn) அடித்து எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்.”மேலும், வனவிலங்குகளுக்கு உணவளிப்பதையோ அல்லது அவற்றின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதையோ பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசு வக்கீல்கள் நியமனம் 100% நியாயமாக நடைபெறும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

MUST READ