Homeசெய்திகள்தமிழ்நாடுபாலியல் புகாரை திசைதிருப்ப '100 கோடி' பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!

பாலியல் புகாரை திசைதிருப்ப ‘100 கோடி’ பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!

-

- Advertisement -

தன் மீது எழுந்துள்ள கடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் “ரூ.100 கோடி பேரப் புகாரை” ஒரு கேடயமாகப் பயன்படுத்தி நாடகமாடி வருவதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்பதால் அவர் மீது காவல் துறை இதுவரை எவ்வித நேரடி நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் புகாரை திசைதிருப்ப '100 கோடி' பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!

​ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ அன்னை வி.ஜி. சரவணனுடன் இணைந்து பணியாற்றி வந்த தவெக பெண் நிர்வாகி ஒருவருக்கு, லாட்டரி தொழில் மூலம் நல்ல வருமானம் வரும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவெக தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி நிர்வாகி பாலசுப்பிரமணியன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தவெக நிர்வாகி ஜெயபால் ஆகியோர் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். ​ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்தப் பெண்ணை இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து அந்தப் பெண் தட்டிக்கேட்டபோது, “உன்னை எம்.எல்.ஏ சரவணன் தான் கூட்டி வரச் சொன்னார்; அவரிடம் போய்க் கேட்டுக்கொள்” என்று கூறி, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.பாலியல் புகாரை திசைதிருப்ப '100 கோடி' பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!​பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், தவெக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். ​ஆனால், இந்த வழக்கில் முதன்மைக் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படும் மற்றும் வன்கொடுமைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன், தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் தவெகவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மீது போலீசார் கை வைக்க அஞ்சி நடுங்குவதாகக் கூறப்படுகிறது. ஆளுங்கட்சிப் பின்னணி மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவர் கைது நடவடிக்கையிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறார். ​தன் மீதான பாலியல் புகாரின் பிடி இறுகுவதையும், சிறையில் இருக்கும் கூட்டாளிகள் மூலம் தனக்கு ஆபத்து வருவதையும் உணர்ந்த எம்.எல்.ஏ சரவணன், உடனடியாக ஒரு புதிய திசைதிருப்பல் உத்தியைக் கையாண்டதாக கூறப்படுகிறது. ஏரலில் உள்ள தனது அலுவலகத்தில் அவசர அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “என்னை தவெகவில் இருந்து இழுக்கச் சொல்லி சிலர் போனில் பேரம் பேசினர். இதற்காக ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி ரூபாய் வரை தருவதாக ஆசைவார்த்தை கூறினர்” என்று முற்றிலும் ஆதாரமற்ற, திடுக்கிடும் புகாரைக் கிளப்பி உள்ளார்.

we-r-hiring

​ஆளுங்கட்சிக்கு எதிராகச் சதி நடப்பது போன்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி, தன் மீதான பாலியல் வழக்கை “அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” என்று சித்தரிப்பதே இவரது முக்கிய நோக்கமாக உள்ளது. ​​இந்த விவகாரம் பெரும் பூதாகரமானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் மகாதேவன், ஏரலில் உள்ள எம்.எல்.ஏ சரவணனின் அலுவலகத்திற்கு நேரில் வந்து அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, தன்னிடம் பேசியவர்களின் செல்போன் எண்கள் மற்றும் சில ஆடியோ ஆதாரங்களை உளவுத்துறையிடம் சரவணன் ஒப்படைத்துள்ளார். ​இருப்பினும், இந்த ஆடியோக்கள் மற்றும் பேரப் புகார்கள் அனைத்தும் தன் மீதுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கைத் திசைதிருப்பவும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் எம்.எல்.ஏ சரவணன் திட்டமிட்டு அரங்கேற்றிய புதிய முயற்சி தான் என்பதை உளவுத்துறை அதிகாரிகள் தங்களது முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது. ​ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் இந்த அதிரடி அரசியல் நாடகமும், அதற்குப் பின்னணியில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சைபர் க்ரைம் மற்றும் மகளிர் போலீசார் இந்த இரண்டு கோணங்களிலும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலி: இடைத்தேர்தல் தள்ளிவைப்பு காரணம் என்ன?

MUST READ