தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆகியவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீர்திருத்தப் பாதையில் மதுவிலக்குத் துறை
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக விக்னேஷ் பொறுப்பேற்ற பிறகு, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, “பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கக் கூடாது” என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், கடை மேலாண்மை மற்றும் பராமரிப்புச் செலவீனங்கள் தொடர்பான விமர்சனங்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை அளித்திருந்தார்.

அப்படியே இரட்டிப்பாகும் சம்பளம்!
டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய, சம்பள உயர்வு கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். தற்போது ஊழியர்களின் அதிகபட்ச சம்பளமே 17,000 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது.
தற்போதைய டாஸ்மாக் ஊழியர்களின் சம்பள விவரம்:
பணியின் விவரம் தற்போதைய மாத சம்பளம்
| ஊழியர்கள் | மாத சம்பளம் |
| கடை மேற்பார்வையாளர் | ரூ. 17,850 |
| விற்பனையாளர் | ரூ. 15,530 |
| உதவி விற்பனையாளர் | ரூ. 14,340 |
இந்தச் சூழலில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ. 30,000 ஆக மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தற்போது வாங்கும் சம்பளத்தை காட்டிலும் அப்படியே இரண்டு மடங்காக (Double) உயர்த்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.ஷ
ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு?
தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது. இதனை இதர அரசு ஊழியர்களைப் போல 60 வயதாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பணி நிரந்தரம்: ஊழியர்களின் பிரதான எதிர்பார்ப்பு
தவெக அரசின் கொள்கைப்படி மதுவிலக்கை அமல்படுத்த டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல் வரலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ‘பணி நிரந்தரம்’ செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர்.
முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி
சம்பள உயர்வு, ஓய்வு பெறும் வயது உயர்வு மற்றும் பணி நிரந்தரம் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், அது ஊழியர்களுக்குப் பெரிய வாழ்வாதார நம்பிக்கையைக் கொடுக்கும். இதன் மூலம், கடைகளில் கமிஷன் வாங்குவது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற புகார்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, ஊழியர்கள் உத்வேகத்துடன் பணியாற்ற வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
