Homeசெய்திகள்தமிழ்நாடு”பதவி சுகத்திற்காக தவெக சென்றவர்களுக்கு மரியாதை இருக்காது” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

”பதவி சுகத்திற்காக தவெக சென்றவர்களுக்கு மரியாதை இருக்காது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பதவி சுகத்திற்காக அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சென்றவர்களுக்கு அங்கு மரியாதை இருக்காது என்று விமர்சித்துள்ளார்.
”பதவி சுகத்திற்காக தவெக சென்றவர்களுக்கு மரியாதை இருக்காது” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

​திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “தற்போதைய திமுக ஆட்சியில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை பொதுமக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்காகக் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதிமுக என்பது சாதாரண தொண்டர்களால் உருவாக்கப்பட்ட பேரியக்கம். ​பதவி சுகத்திற்காகத்தான் அதிமுகவிலிருந்து சிலர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றுள்ளார்கள். அப்படி கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு அந்தப் புதிய கட்சியில் நிச்சயம் மரியாதை இருக்காது.

we-r-hiring

நாம் அனைவரும் தற்போதிலிருந்தே முழு ஒற்றுமையுடன் செயல்பட்டு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கடுமையாக உழைத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே, தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் உழைக்கக்கூடிய நபர்களை மட்டுமே வேட்பாளர்களாகப் பரிந்துரைக்க வேண்டும்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். ​ முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் சிலர், “கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஒன்றியச் செயலாளர்களைச் சுதந்திரமாகப் பணியாற்ற விடவில்லை. சிலரின் தலையீடுகளால்தான் அதிமுக கடந்த தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். ​மேலும், கட்சிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், நிர்வாக வசதிக்காகவும் திருப்பத்தூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தவெக எம்எல்ஏ சரவணனின் புகார் முற்றிலும் பொய் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

MUST READ