Homeசெய்திகள்தமிழ்நாடுமதுப்பிரியர்களுக்கு சிக்கல்- டாஸ்மாக் பணியாளர்கள் வரும் 10-ம் தேதி குடும்பத்தோடு போராடம்

மதுப்பிரியர்களுக்கு சிக்கல்- டாஸ்மாக் பணியாளர்கள் வரும் 10-ம் தேதி குடும்பத்தோடு போராடம்

-

- Advertisement -

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தாத மதுவிலக்குத் துறை நிர்வாகத்தைக் கண்டித்து, சேலத்தில் இன்று டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பணியாளர்கள் அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வரும் 10-ஆம் தேதி குடும்பத்தினருடன் முற்றுகை மற்றும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
​போராட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

டாஸ்மாக்

we-r-hiring

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்குத் தனியாரை நியமிக்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதத்தில் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை மூடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அமைச்சர் கொடுத்த வாக்குறுதி ஏமாற்றம்:
அப்போது தலையிட்ட மதுவிலக்குத் துறை அமைச்சர், இப்பிரச்சினைகளுக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் எனத் தற்காலிகமாக அவகாசம் கேட்டிருந்தார். அமைச்சரின் இந்த வாக்குறுதியை ஏற்றுப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர். ஆனால், குறிப்பிட்ட ஜூன் 30-ஆம் தேதி கடந்தும், அமைச்சர் தரப்பிலோ அல்லது டாஸ்மாக் நிர்வாகத் தரப்பிலோ தங்களை அழைத்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மண்டல அலுவலகம் முற்றுகை:
அமைச்சரின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் திரண்டு முற்றுகையிட்டு, நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

10-ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம்:
இதுகுறித்து போராட்டக் குழுவினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைச்சர் கொடுத்த அவகாசம் முடிந்தும் எங்களை அழைத்து இதுவரை யாரும் பேசவில்லை. எங்களை ஏமாற்றிய நிர்வாகத்தைக் கண்டித்து இன்று முதல்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். வரும் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களை எங்கள் குடும்பத்தினருடன் திரண்டு முற்றுகையிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்கும் கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.

MUST READ