Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் விஜய் கரூர் செல்வதையோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதையோ திமுக தடுக்கவில்லை - மூத்த வழக்கறிஞர்...

முதல்வர் விஜய் கரூர் செல்வதையோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதையோ திமுக தடுக்கவில்லை – மூத்த வழக்கறிஞர் வில்சன் பேட்டி

-

- Advertisement -

கரூர் விவகாரத்தில் திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அது வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இது திமுகவிற்கு எவ்வித பின்னடைவும் இல்லை என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் டெல்லியில் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய்

கரூர் விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியதாவது:

we-r-hiring

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்:
​”கரூர் விவகாரம் தொடர்பாக எழும் எந்தவொரு புகாராக இருந்தாலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று நபர்களைக் கொண்ட குழுவிடம்தான் முறையிட வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைத் தற்போதைய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீறியுள்ளார் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ‘உத்தரவுகள் மீறப்பட்டிருந்தால் இது தொடர்பாக நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt Case) தாக்கல் செய்யலாமே’ எனக் கூறியதுடன், ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவிடம் சென்று முறையிடவும் அனுமதி வழங்கியுள்ளது.

ஊடகங்கள் தவறான தகவல் பரப்புகின்றன:
​முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் விவகாரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார். அதேபோல தற்போதைய முதலமைச்சர் விஜய் 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
​ஆனால், ‘கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்றோ அல்லது ‘முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்றோ திமுக தனது மனுவில் எங்கும் கோரவில்லை. ஊடகங்களில் இது தொடர்பாக முற்றிலும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

பின்னடைவு இல்லை:
​செய்தியாளர்கள் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது திமுகவிற்குப் பின்னடைவா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வில்சன், “முதலில் இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படவில்லை. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று, எங்களால் இந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே, இதில் திமுகவிற்கு எவ்வித பின்னடைவும் இல்லை.
​அடுத்தகட்டமாக, நீதிமன்ற உத்தரவை மீறிய ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ரஸ்தோகி குழுவிடம் சென்று விரிவாக முறையிடவும் திமுக முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

MUST READ