Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம்  தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்

சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம்  தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்

-

- Advertisement -

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம்  தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், “இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விரைந்து வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த 12 நாட்களுக்குள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெருங்குற்றங்கள் நடைபெற்றிருப்பதாக குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முதலமைச்சர் சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இந்த துயர நேரத்தில் திமுக துணையாக நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் பெருங்குற்றச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்

MUST READ