விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக 6 வயது மகனைக் கிணற்றில் வீசிக் கொலை செய்ததாகத் தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவன் – மனைவி இடையே தகராறு
நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் செல்வராஜ், ஆத்திரத்தில் தனது 6 வயது மகன் சஞ்சயைக் கிணற்றில் தூக்கி வீசியுள்ளார்.
தந்தை செல்வராஜ் கைது
இதில் சிறுவன் சஞ்சய் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிறுவனின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுவனைக் கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தந்தை செல்வராஜைக் கைது செய்தனர்.
குடும்பத் தகராறில் பெற்ற தந்தையே 6 வயது மகனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!
