Homeசெய்திகள்சினிமாபூஜையுடன் தொடங்கும் அஜித்தின் 'டேர் டெவில்'.... பார்த்திபன் வெளியிட்ட புகைப்படம்!

பூஜையுடன் தொடங்கும் அஜித்தின் ‘டேர் டெவில்’…. பார்த்திபன் வெளியிட்ட புகைப்படம்!

-

- Advertisement -

அஜித்தின் டேர் டெவில் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.பூஜையுடன் தொடங்கும் அஜித்தின் 'டேர் டெவில்'.... பார்த்திபன் வெளியிட்ட புகைப்படம்!

​தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் அடுத்ததாக நடிக்கவுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஏற்கனவே அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனவே அடுத்ததாக இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதால் டேர் டெவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.

we-r-hiring

அந்த வகையில் ஏற்கனவே இந்த படமானது நவம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படம் இன்று கோலாகலமாகப் பூஜையுடன் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில், நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் பார்த்திபன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதாவது நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” இன்று டேர் டெவில் தினம். அஜித்துடன் திரையை பகிர்ந்து கொள்வதிலும், ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணியாற்றுவதிலும் அமேசிங் குஷி” என்று குறிப்பிட்டு டேர் டெவில் படத்தின் பூஜைக்கு தயாரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜித் மற்றும் பார்த்திபன் இவர்களது இந்த கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை வீடியோ இன்று மாலை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
​

MUST READ