spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉதயநிதியின் மகன் வந்தாலும் வரவேற்போம்- கே.என்.நேரு

உதயநிதியின் மகன் வந்தாலும் வரவேற்போம்- கே.என்.நேரு

-

- Advertisement -

சேலம் திமுகவின் கோட்டையாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இல்வச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சேலம் திமுகவின் கோட்டையாக மாறும். திமுகவினர் நன்றியோடு இருப்பவர்கள். எங்களையெல்லாம் உருவாக்கிய தலைவருக்கும், தலைவர் குடும்பத்துக்கும் விஸ்வாசமாக இல்லாமல் வேறு யாருக்கு விஸ்வாசமாக இருப்போம்.

we-r-hiring

உதயநிதி மட்டுமல்ல, அவரின் மகன் அரசியலுக்கு வந்தாலும், வாழ்க என்றுதான் சொல்லுவோம்.வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிடமுடியாது. திமுக தொண்டர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பவர்கள். இது வாரிசு அரசியல் அல்ல. கருணாநிதியின் குடும்பத்திற்கு திமுகவினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். அதன் அடிப்படையில் உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

MUST READ