Homeசெய்திகள்சென்னைமதுராந்தகம் அருகே அரசு பள்ளியில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடம்...

மதுராந்தகம் அருகே அரசு பள்ளியில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் திறப்பு!

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட படாளம் பகுதியில் அமைந்துள்ள எம்.சி.எஸ்.எம். அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.148.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.மதுராந்தகம் அருகே அரசு பள்ளியில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் திறப்பு!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் புதிய பள்ளிக் கட்டிடத்தை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தனர்.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள புதிய வகுப்பறைகளைப் பார்வையிட்ட அமைச்சர் சரத்குமார், மாணவ, மாணவிகளிடம் பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, தங்கள் பள்ளியில் போதிய ஆய்வக வசதிகள் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிக்குத் தேவையான ஆய்வகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், பள்ளியில் போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பாலாஜி, விஜி குமரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காட்டுப்பள்ளியில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்! விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சர்வதேச டெண்டர் கோரிய சென்னை குடிநீர் வாரியம்

MUST READ