Homeசெய்திகள்சினிமாஅந்தப் படம் ஒரு உண்மையான ஃபேன் பாய் சம்பவம்.... 'D56' குறித்து தனுஷ் கொடுத்த மாஸ்...

அந்தப் படம் ஒரு உண்மையான ஃபேன் பாய் சம்பவம்…. ‘D56’ குறித்து தனுஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தன்னுடைய D56 படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.அந்தப் படம் ஒரு உண்மையான ஃபேன் பாய் சம்பவம்.... 'D56' குறித்து தனுஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் இன்று (நவம்பர் 6) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பல விஷயங்களை பற்றி பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வகையில் தனுஷ் தனது 56-வது திரைப்படமாக உருவாகும் ‘D56’ குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

we-r-hiring

அதாவது தனுஷின் 56வது திரைப்படத்தை ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்து, தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்குகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் பூஜை சிறப்பாக நடந்த நிலையில் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தப் படம் ஒரு உண்மையான ஃபேன் பாய் சம்பவம்.... 'D56' குறித்து தனுஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!இந்நிலையில் தான் நடிகர் தனுஷ், ‘ஓம்’ பட விழாவில் தனது 56-வது படம் குறித்து பேசினார். அதன்படி அவர், “D56 திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான ஒரு படம். இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து வழங்கும் ஒரு உண்மையான ஃபேன் பாய் சம்பவமாக இது இருக்கும். உங்கள் அனைவருக்கும் இது மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது” என்று மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளார். ஒரு திறமையான இயக்குநரின் இயக்கத்தில், தனுஷின் அதிரடியான நடிப்பில் உருவாகவுள்ள ‘D56’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்த அறிவிப்பின் மூலம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.அந்தப் படம் ஒரு உண்மையான ஃபேன் பாய் சம்பவம்.... 'D56' குறித்து தனுஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

D56 என்ற தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் தனுஷுடன் இணைந்து வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். சித்தாரா என்டேர்டைன்மெண்ட்ஸ், ப்ரைமார்க் ப்ரோடக்ஷன்ஸ், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களை இணைந்து தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ