Homeசெய்திகள்சினிமா'சண்டியர்' பட புதிய போஸ்டரும் புதிய அறிவிப்பும்!

‘சண்டியர்’ பட புதிய போஸ்டரும் புதிய அறிவிப்பும்!

-

- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனின் 237-வது திரைப்படமான ‘சண்டியர்’ படத்திலிருந்து ஒரு மிரட்டலான புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.'சண்டியர்' பட புதிய போஸ்டரும் புதிய அறிவிப்பும்!

‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ படங்களின் மூலம் மிகவும் பிரபலமான இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். எஸ்.யு. அருண்குமார் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இந்நிலையில்தான், உலகநாயகனின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7) இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதே கையோடு படத்தின் படப்பிடிப்பையும் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்க, பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர். மேலும், சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்கிறார்.'சண்டியர்' பட புதிய போஸ்டரும் புதிய அறிவிப்பும்!ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் சர்ப்ரைஸ் போஸ்டரும், ஷூட்டிங் தொடக்க அறிவிப்பும் கமல்ஹாசனின் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்களும், படம் தொடர்பான மற்ற விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இந்த படத்தின் டைட்டில் ஆனது கடந்த 2004 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ