HomeBreaking Newsதீபாவளி விருந்தாக மாஸ் காட்டும் சிம்பு .... வெறித்தனமான கானா பாடலுடன் வெளியான 'அரசன்' கிளிம்ப்ஸ்!

தீபாவளி விருந்தாக மாஸ் காட்டும் சிம்பு …. வெறித்தனமான கானா பாடலுடன் வெளியான ‘அரசன்’ கிளிம்ப்ஸ்!

-

- Advertisement -

சிம்புவின் அரசன் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.தீபாவளி விருந்தாக மாஸ் காட்டும் சிம்பு .... வெறித்தனமான கானா பாடலுடன் வெளியான 'அரசன்' கிளிம்ப்ஸ்!

தமிழ் திரையுலகில் முதன்முறையாக இணையும் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘அரசன்’. இது7 இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே சினிமா ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்து வருகிறது.
இத்திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வடசென்னை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தில் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தி வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் இன்று (நவம்பர் 8) தீபாவளி திருநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குச் சிறப்பு விருந்தளிக்கும் வகையில் ‘அரசன்’ திரைப்படத்திலிருந்து ஒரு மிரட்டலான சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அனிருத்தின் தூக்கலான ‘கானா’ பாடலின் பின்னணியில் ‘தாஸ் அண்ணன்’ என்ற கெத்தான கதாபாத்திரத்தில் தோன்றும் சிலம்பரசனின் மாஸ் ஸ்கிரீன் பிரசன்ஸும், அவரின் மிரட்டலான லுக்கும் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இந்த மாஸ் தீபாவளி கிளிம்ப்ஸ் வெளியீடு சிம்புவின் ரசிகர்களைத் துள்ளிக்குதிக்க வைத்துள்ளதோடு, ‘அரசன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு தூண்டியுள்ளது.

MUST READ