Homeசெய்திகள்சினிமாகடல் தாண்டி ஒலிக்கும் ராமின் காவியம் - மலேசியா, சிங்கப்பூரில் ஓடிடியில் வெளியான 'ஏழு கடல்...

கடல் தாண்டி ஒலிக்கும் ராமின் காவியம் – மலேசியா, சிங்கப்பூரில் ஓடிடியில் வெளியான ‘ஏழு கடல் ஏழு மலை’!

-

- Advertisement -

‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ போன்ற மாஸ்டர்பீஸ் திரைப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கலை இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘ஏழு கடல் ஏழு மலை’.கடல் தாண்டி ஒலிக்கும் ராமின் காவியம் - மலேசியா, சிங்கப்பூரில் ஓடிடியில் வெளியான 'ஏழு கடல் ஏழு மலை'!​சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் நடிப்பிலும், யுவன் சங்கர் ராஜாவின் மெய்சிலிர்க்க வைக்கும் இசையிலும் உருவான இத்திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பலதரப்பட்ட பாராட்டுக்களைப் பெற்றதோடு, கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் அசாத்தியமான நடிப்புக்காகத் திரையரங்குகளிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
​இந்நிலையில், திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு இத்திரைப்படத்தைக் காணக் காத்திருந்த மலேசியா மற்றும் சிங்கப்பூர் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.கடல் தாண்டி ஒலிக்கும் ராமின் காவியம் - மலேசியா, சிங்கப்பூரில் ஓடிடியில் வெளியான 'ஏழு கடல் ஏழு மலை'!​’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தற்போது மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் ரசிகர்களுக்காக ‘அஸ்ட்ரோ மூவீஸ்’ (Astro Movies) OTT தளத்தில் வீடியோ ஆன் டிமாண்ட் சேவையில் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கிறது. திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள் மற்றும் மீண்டும் இந்த உன்னதமான படைப்பைக் அனுபவிக்க விரும்புவோர், தற்போது டிஜிட்டல் தளத்தில் இப்படத்தைக் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

MUST READ