Homeசெய்திகள்சினிமாபாரம்பரிய உடையில் கெத்து காட்டும் 'தல' ... அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்!

பாரம்பரிய உடையில் கெத்து காட்டும் ‘தல’ … அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்!

-

- Advertisement -

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக் வைரலாகி வருகிறது.பாரம்பரிய உடையில் கெத்து காட்டும் 'தல' ... அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்!

​தமிழ் திரையுலகின் மாஸ் நடிகரான அஜித் குமார், தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் தோற்றத்திலும் ஸ்டைலிலும் காட்டும் தனித்துவம் ரசிகர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தக்கூடியது. அதே சமயம் சினிமாவை தாண்டி தனது இலக்குகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். ​அந்த வகையில், கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இந்நிலையில் பாரம்பரிய உடை அணிந்து மிகவும் ஸ்மார்ட்டான தோற்றத்தில் அஜித் குமார் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அஜித்தின் இந்த மாஸான லுக், இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், அதற்காகத் தயாராகி வரும் அஜித்தின் இந்த லேட்டஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.பாரம்பரிய உடையில் கெத்து காட்டும் 'தல' ... அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக் வைரல்!

we-r-hiring

அஜித்தின் டேர் டெவில் திரைப்படத்தை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். படத்தில் பார்த்திபன், ஸ்ரீலீலா, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ