அதிமுகவைச் சேர்ந்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக, இன்று (நவம்பர் 10) முதல் வரும் 12-ம் தேதி வரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் விசாரணை நடைபெற உள்ளது.


தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோதே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரும் தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.
இதனை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இன்று முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் விசாரணையில், ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராக உள்ளனர்.
தொடர்ந்து, வரும் 17-ம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதன் பின்னர், நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்குக்கும் விடுமுறையா? – முதலமைச்சர் விஜய்க்கு சீமான் கேள்வி!
