தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி, இரண்டு நாட்களில் மட்டும் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.234.75 கோடி விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 7ஆம் தேதி ரூ.234.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, தீபாவளி நாளான நவம்பர் 8ஆம் தேதி ரூ.206.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மண்டலத்தில் அதிக விற்பனை
மண்டல வாரியான விற்பனையில், திருச்சி மண்டலம் அதிகபட்சமாக ரூ.98.97 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி இரண்டு நாட்களில் மட்டும் ரூ.441 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு!
