Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே இல்லை; ஒரே நாளில் 8 கொலைகள்” – எடப்பாடி பழனிசாமி கடும்...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே இல்லை; ஒரே நாளில் 8 கொலைகள்” – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே இல்லை; ஒரே நாளில் 8 கொலைகள்” – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தமிழகத்தில் ஒரே நாளில் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதே கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, “தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 8 கொலைகள் நடைபெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தீபாவளி நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தீபாவளி நாளில் தமிழகத்தில் 8 கொலைகள்! 2 சிறுவர்கள் உட்பட பலி – தேனி முதல் சிவகங்கை வரை அதிர்ச்சி சம்பவங்கள்!

MUST READ