Homeசெய்திகள்தமிழ்நாடுசீமான் அடிப்படையில் மானம், மரியாதை உடையவர் – பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கருத்து!

சீமான் அடிப்படையில் மானம், மரியாதை உடையவர் – பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கருத்து!

-

- Advertisement -

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு திமுக, அதிமுக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து, திராவிடத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.சீமான் அடிப்படையில் மானம், மரியாதை உடையவர் – பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கருத்து!

கொள்கை ரீதியாக சீமானுக்கும் தனக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அடிப்படையில் அவர் மானமும் மரியாதையும் உள்ள மனிதர் என்றும், தேர்தல் வெற்றிக்காகத் தனது தன்மானத்தை விட்டுக்கொடுத்து பிற கட்சிகளின் ஆதரவைக் கேட்கமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

‘திராவிடம் 100’ என்ற யூடியூப் ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

குறிப்பாக, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், அவருக்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சுப.வீரபாண்டியன், சீமானுக்கும் தனக்கும் கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாகப் பெரியார் மற்றும் திராவிடம் தொடர்பான விவகாரங்களில் இருவரும் எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், ஒரு காலத்தில் சீமானுடன் இணைந்து பயணித்தவர் என்பதால் அவரைப் பற்றிய தனிப்பட்ட புரிதல் தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், எவ்வளவு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் அடிப்படையில் சீமான் மானமும் மரியாதையும் உள்ள மனிதர் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

தன்மானத்தை விட்டுக்கொடுத்து ஆதரவு கேட்கமாட்டார்!

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் நினைவிடங்களை ‘திராவிட சுடுகாடு’ என்று சீமான் கடுமையாக விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய சுப.வீரபாண்டியன், இத்தகைய விமர்சனங்களை முன்வைத்த ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காகவோ தேர்தல் வெற்றிக்காகவோ தனது தன்மானத்தை விட்டுக்கொடுத்து திமுக அல்லது அதிமுகவின் ஆதரவைக் கேட்பார் என்று தாம் நம்பவில்லை என்றார்.

மேலும், அந்தக் கட்சிகளின் ஆதரவை சீமான் ஏற்றுக்கொள்வார் என்றும் தாம் கருதவில்லை எனத் தெரிவித்தார். ஊடகங்களில் பரவி வரும் இத்தகைய தகவல்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளாகக்கூட இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

எந்தச் சூழ்நிலையிலும் பிறரின் ஆதரவை நாடாமல், தனியாகவே தேர்தலைச் சந்தித்து சீமான் எதிர்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சுப.வீரபாண்டியன் கூறினார்.

கொள்கை ரீதியாகத் தீவிரமான முரண்பாடுகளைக் கொண்டுள்ள தலைவரைப் பற்றியும், அவரது தன்மானம் மற்றும் தனிப்பட்ட பண்புகள் குறித்துப் பாராட்டிப் பேசியுள்ள பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா? – பொதுவேட்பாளர் குறித்த கேள்விக்கு சீமான் பதில்! திமுக, அதிமுக பெருந்தன்மையுடன் ஆதரித்தால் ஏற்றுக்கொள்வேன் – சீமான் பேட்டி

MUST READ