சூர்யாவின் சீன் திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூலை வாரிக்குவித்து வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘சீன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.
‘ஆவேசம்’ திரைப்பட புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார். படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் இத்திரைப்படம் வெளியான குறுகிய நாட்களிலேயே ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல், வாரத்தின் அடுத்தடுத்த நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. முந்தைய நாளைக் காட்டிலும் ஒவ்வொரு நாளும் வசூல் மற்றும் ரசிகர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே செல்வது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் இந்த வீக்கெண்ட் இப்படத்திற்கு ஒரு சூப்பர் ஓபனிங் வீக்கெண்டாக அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இன்றைய நாளுக்கான புக்கிங் நிலவரமும் மிகச் சிறப்பாகவே காணப்படுகிறது. குறிப்பாக, இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள சூர்யாவுக்கு, நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இது மிகப்பெரிய லாபத்தைத் தரும் ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

