விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட டிரைலர் வெளியாகி உள்ளது.
மு. மாறன் எழுத்து மற்றும் இயக்கத்தில், ‘பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி’ சார்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரு பாசமிக்க தந்தைக்கும் அவரது மகளுக்குமான ஆழமான அன்பையும், அவர்களுக்கு இடையே நிகழும் எமோஷனல் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், அருவி மதன், ஜென்சன் திவாகர், ஸ்ரீஜா ரவி, பிரவீனா, சித்ரா லட்சுமணன் மற்றும் குழந்தை நட்சத்திரம் லிதன்யா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து, எடிட்டிங் பணிகளையும் கவனித்துள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான ஆவலை இரட்டிப்பாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. ட்ரைலரின் இறுதியில் வரும் இசையும், பாடலும் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது. எனவே இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
