ராஜ்குமார் பெரியசாமி ஓம் படம் குறித்து பேசி உள்ளார்.
‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள திரைப்படம் தான் ஓம். இந்த படத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் மற்றும் படப்பிடிப்பு திட்டமிடல் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது சமீபத்திய பேட்டியில் பேசிய ராஜ்குமார் பெரியசாமி, “ஒரு இயக்குநர் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளுக்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர் எடுக்கும் திரைப்படத்தைப் பொறுத்தது. நாங்கள் கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலேயே ‘ஓம்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். அதனால் இப்படத்திற்கு முன்பாக ப்ரீ-புரொடக்ஷன் செய்ய எனக்கு போதிய நேரம் கிடைத்தது. தனுஷ் சாரும் இதில் மிகத் தெளிவாக இருந்தார்.
‘அமரன்’ திரைப்படத்திற்கும் எனக்கு இதே அளவுக்குத்தான் ப்ரீ-புரொடக்ஷன் நேரம் கிடைத்தது.அதேபோல், இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும்போதே இதன் ரிலீஸ் தேதியை நாங்கள் உறுதி செய்துவிட்டோம். ஏனெனில், 2026 ஆம் ஆண்டிலேயே இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
துல்லியமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஓம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.

