Homeசெய்திகள்சினிமாமணிகண்டனின் 'மக்கள் காவலன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

-

- Advertisement -

மணிகண்டனின் மக்கள் காவலன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.மணிகண்டனின் 'மக்கள் காவலன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ போன்ற அடுத்தடுத்த வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகர் மணிகண்டன், அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘மக்கள் காவலன்’. இப்படத்தில் மணிகண்டன் முதன்முறையாகக் கம்பீரமான போலிஸ் அதிகாரியாக களமிறங்குகிறார். பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்தோஷ் குமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். பா. ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’, அதிதி ஆனந்தின் ‘நீலம் ஸ்டுடியோஸ்’ மற்றும் பிர்லா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.மணிகண்டனின் 'மக்கள் காவலன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்! நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, பிரதீபன் செல்வ ரத்தினம் ஒளிப்பதிவுப் பணிகளையும், டான் அசோக் சண்டைப் பயிற்சிகளையும் கவனித்துள்ளனர்.
மணிகண்டனின் பிறந்தநாளன்று இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 4 அன்று ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘Ignore’ என்ற பாடல் நாளை மாலை 7:00 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மணிகண்டனின் 'மக்கள் காவலன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

we-r-hiring

மேலும் ​இப்படத்தில் மணிகண்டனுடன் இணைந்து திவ்யா ஸ்ரீபாதா, வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், சபுமோன், உன்னி மாயா மற்றும் ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ