spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிதார்த் சரத்குமார் கூட்டணியின் சமரன்... லேட்டஸ்ட் ஷுட்டிங் அப்டேட்!

விதார்த் சரத்குமார் கூட்டணியின் சமரன்… லேட்டஸ்ட் ஷுட்டிங் அப்டேட்!

-

- Advertisement -

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் விதார்த் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் சமரன். விதார்த் பல படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். அதே சமயம் நடிகர் சரத்குமாரும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது பன்முகத்தன்மையை நிரூபித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் திருமலை பாலுச்சாமி இயக்கம் சமரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.sarathkumar

we-r-hiring

இந்தப் படத்தை எம் 360 டிகிரி ஸ்டுடியோ தயாரிக்கிறது. குமார் ஸ்ரீதர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். வேத் சங்கர் சுகவனம் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது. இப் படத்தில் மலையாள நடிகர்கள் சித்திக் மற்றும் ஆர். நந்தா இருவரும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் கும்கி அஸ்வின், சிங்கம் புலி, ஜார்ஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஆர். நந்தா இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதையானது, ராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி இவர்களை சுற்றி நடக்கும் சஸ்பென்ஸ் கதையாகும்.

தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் வளசரவாக்கம், காட்டுப்பாக்கம், மணலி, மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

மேலும் விரைவில் எந்த படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ