Homeசெய்திகள்இந்தியாஉறவு விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சம் – 10-ம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கலந்த...

உறவு விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சம் – 10-ம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை; 19 வயது பெண், 14 வயது சிறுவன் கைது!

-

- Advertisement -

தங்களது உறவு விவகாரத்தை நேரில் பார்த்து குடும்பத்தினரிடம் தெரிவித்துவிடுவதாக எச்சரித்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு, பூச்சிக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து கொலை செய்ததாக 19 வயது இளம்பெண் மற்றும் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உறவு விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சம் – 10-ம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை; 19 வயது பெண், 14 வயது சிறுவன் கைது!

தனிமையில் இருந்ததைப் பார்த்த மாணவன்

we-r-hiring

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜில்லேலா ரவி (15), 10-ம் வகுப்பு படித்து வந்தார். தசரா விடுமுறைக்காகத் தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். அதே கிராமத்தில் கணவரைப் பிரிந்து தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த அபர்ணா (19) என்ற இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும் இடையே நெருக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 20-ம் தேதி இருவரும் தனிமையில் இருந்ததை ரவி நேரில் பார்த்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை இருவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்துவிடுவதாக ரவி எச்சரித்துள்ளார். இதனால் தங்களது உறவு வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து

இதைத்தொடர்ந்து, ரவியைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி அபர்ணா, தனது 14 வயது நண்பன் மூலம் ரவியிடம் பேசி சமாதானம் செய்துகொள்ளலாம் எனக் கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பூச்சிக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தை ரவிக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் குளிர்பானத்தைக் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற ரவிக்குச் சிறிது நேரத்திலேயே தொண்டையில் கடுமையான எரிச்சலும், வாயில் கொப்புளங்களும் ஏற்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மாணவன் அளித்த வாக்குமூலத்தால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அபர்ணாவிடம் விசாரணை நடத்தியபோது குளிர்பானத்தில் விஷம் கலந்தது தொடர்பான விவரங்கள் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

கம்மம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட ரவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக வாரங்காலில் உள்ள எம்.ஜி.எம். அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் 8-ம் தேதி சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார்.

19 வயது பெண், 14 வயது சிறுவன் கைது

ரவி அளித்த வாக்குமூலம் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, அபர்ணா மற்றும் 14 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின்படி அபர்ணா சத்துப்பள்ளி துணைச் சிறையில் அடைக்கப்பட்டார். 14 வயது சிறுவன் வாரங்காலில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உறவு விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் 10-ம் வகுப்பு மாணவன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாத்தாவின் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை இல்லை – சென்னை சொத்து வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

MUST READ