தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.
2026-ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ மற்றும் ‘சர்தார் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே அவருக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதனால், அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்ஷல்’ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் 2027 தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது 30-வது திரைப்படமான ‘கார்த்தி 30’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில்
தற்போது ‘கார்த்தி 30’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அப்டேட் கிடைத்துள்ளது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பகுதிகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை வரும் 2027-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு பரிசீலனை செய்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
