இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“
சென்னை திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வந்து சாமியை வழிபாடு செய்து வழக்கம்.

வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான வசந்த உற்சவம் இன்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் தொடங்குகிறது.

இன்று மாலை ஆறு மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம் சாலைகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருள்வார்.

அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் சாமி புறப்பாடு நடக்கிறது. நான்கு சாலை வழியாக சாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார். வசந்த உற்சவம் விழா வருகிற முப்பத்தொன்றாந் தேதி மாலை நிறைவு பெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.