சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். ஆனி மாதத்தில் சூரியன், புதன், குரு கிரகங்களின் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. லாபகரமான மாதம். நினைத்த காரியம் நிறைவேறும். எல்லா செயல்களும் வெற்றியடையும். உங்களின் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும். மூன்று கிரகங்களின் கூட்டணியால் திடீர் ஜாக்பாட் வந்து திக்குமுக்காட வைக்கும். படிப்பு, வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
கன்னி: உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் நீங்கள் செய்யும் செயல்கள் வெற்றியடையும். தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு திடீர் லக் வரும். சுக்ர யோகத்தால் நகை, ஆடை ஆபரணம் ஆடம்பரப்பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். உங்களின் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு கேதுவினால் திடீர் பண வருமானம் தேடி வரும்.
துலாம் : பாக்ய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் கூட்டணியால் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும். தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பிள்ளைகளால் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்வீர்கள் விவசாயம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதால் இருக்கிறார் குரு பார்வையால் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியும் கிடைக்கும்.
விருச்சிகம்: சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மூன்று கிரகங்களின் கூட்டணியால் திடீர் யோகம் அதிகரிக்கும். ஜவுளி வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.