டெல்லி மலை மந்திர் முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில் காவடி எடுத்து வழிப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா .
தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற உத்தர சுவாமி மலை கோவில் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. டெல்லி வாழ் தமிழர்கள் மட்டும்மல்லாம் டெல்லியில் வசிக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் வழிப்பட்டு முருகனின் அருளை பெற்றனர்.
விழாவில் டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டு காவடி எடுத்து கோயிலை சுற்றி வந்து வழிபட்டார். கந்தசஷ்டி விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, டெல்லியில் உள்ள பிரசித்திபெற்ற இந்த மலை கோவில் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தானும் காவடி எடுத்து கடவுள் ஆசிர்வாதம் பெற்றேன் என்று கூறி அனைத்து தமிழ் மக்களுக்கும் தனது கந்த சஷ்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இக்கோவிலுக்கு எங்கிருந்து வந்தாலும் மக்களின் குறைகள் நிவர்த்தி அடையும். டெல்லியில் பலமானில மக்கள் வசிக்கின்றனர், இருப்பினும் அவர்கள் அனைவருமே டெல்லி வாசிகள் தான் என்று கூற விரும்புகிறேன். டெல்லி கலாச்சாரம் என்பது உலக கலாச்சாரம் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. இக்கோவில் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது மட்டும் அல்லாமல் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை மிகுந்த உறுதியுடன் இக்கோவில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு என்றும் கூறினார் மனிஷ் சிசோடியா .
கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – அரோகரா சரண கோஷங்களுடன் வருகை தந்த முருக பெருமான்