- Advertisement -
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 16 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.15,360 வரை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையே, வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நகை வாங்குவோர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் சரிவு – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்தது!
