spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅருள்நிதி படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!

அருள்நிதி படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!

-

- Advertisement -

கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படக்குழுவினர் அதைக் கொண்டாடியுள்ளனர்.

ராட்சஷி படத்தின் இயக்குனர் கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கிறது மற்றும் டி இமான் இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் நடிகை துசாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ள்ளனர்.

we-r-hiring

கடந்த மே 26-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆனது. கிராமத்தில் உள்ள சாதிகள் குறித்தும் சாதி அரசியல் குறித்தும் பேசக்கூடிய படமாக இப்படம் அமைந்துள்ளது.

அருள்நிதி இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக மிரட்டியுள்ளார். சந்தோஷ் பிரதாப் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் கூட சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். டி இமானின் இசை இந்த படத்திற்கு பலமளித்துள்ளது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் படத்திற்கும் கிடைத்த வரவேற்பை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

MUST READ