நேபாளத்தில் இன்று காலை ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும், இந்தியாவின் சில இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

சீன எல்லைக்கு அருகே கிழக்கு நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் இன்று காலை 7.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தப்லேஜங் மாவட்டத்தில் உள்ள ஒலாங்சுங் கோலா பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இது நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பல மாவட்டங்களில் உணரப்பட்ட அதிர்வுகள்!
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சங்குவாசபா, இலாம்ப், பாஞ்ச்தர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உணரப்பட்டன. மேலும், தலைநகர் காத்மாண்டு மற்றும் நாட்டின் மேற்கு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலும் நில அதிர்வு!
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச் பெஹார் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
உயிரிழப்பு, பொருட்சேதம் ஏற்பட்டதா?
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த 5.6 ரிக்டர் நிலநடுக்கம் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்! கேங்டாக் உள்ளிட்ட இடங்களில் அதிர்வு
