HomeBreaking Newsகைது செய்யப்படுகிறாரா எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்? வீட்டில் போலீஸார் திடீர் ஆய்வு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!

கைது செய்யப்படுகிறாரா எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்? வீட்டில் போலீஸார் திடீர் ஆய்வு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!

-

- Advertisement -


பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்கள் மற்றும் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்து, காவல்துறையினருக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கைது செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்றுள்ளனர். அங்கு சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொண்ட போலீசார், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சம்பவ இடத்திற்கு வந்த பிறகு, சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீடு

மேலும், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினரின் செல்போன்களைப் பறிமுதல் செய்து, அதில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தால் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தைச் சுற்றிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது – வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி!

MUST READ