Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர்! மாற்றுத்திறனாளி சகோதரர், சகோதரிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

வாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர்! மாற்றுத்திறனாளி சகோதரர், சகோதரிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

-

- Advertisement -

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர், அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான ருக்மணி (42), செல்வகுமார் (50) ஆகியோரைச் சந்தித்தார்.

அப்போது அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்த முதலமைச்சரிடம், தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், புதிய வாகனங்கள் வழங்கினால் அன்றாடப் பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், தேர்தல் முடிந்ததும் உரிய உதவி வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை முதலமைச்சர் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் – கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு!

MUST READ