Homeசெய்திகள்இந்தியாபெற்றோரை  பராமரிக்கத் தவறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை – கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடும்...

பெற்றோரை  பராமரிக்கத் தவறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை – கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடும் எச்சரிக்கை!

-

- Advertisement -

Kerala CM V.D. Satheesanகேரளாவில் பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு, பின்னர் அவர்களைப் பராமரிக்கத் தவறும் அல்லது கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

 கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தில், லூலூ குழுமத் தலைவர் எம்.ஏ. யூசுப் அலியின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி செலவில் ஆண் முதியோர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள ‘பித்ருமந்திரம்’ (Pithrumandiram) இல்லத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது முதலமைச்சர் வி.டி. சதீசன் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார்.

முதலமைச்சர் வி.டி. சதீசன் உரையின் முக்கிய அம்சங்கள்:

  • மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மசோதா: கடந்த அக்டோபர் மாதம் கேரள சட்டப்பேரவையில் ‘கேரளம் மூத்த குடிமக்கள் (நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026’ நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், பெற்றோரின் சொத்துக்களைப் பெற்ற பிறகு அவர்களைக் கைவிடும் அல்லது துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

  • ஆளுநர் ஒப்புதலுக்குப் பின் உடனடி நடவடிக்கை: இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துச் சட்டமான பிறகு, பெற்றோரை ஏமாற்றி சொத்துக்களைப் பறித்துவிட்டு அவர்களைக் கைவிடுபவர்கள் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்; இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம் என முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

  • தனித் துறை உருவாக்கம்: ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே, இந்தியாவிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்கள் நலனுக்காகத் தனித் துறையைக் கேரள அரசு உருவாக்கியுள்ளது.

  • சமூகப் பொறுப்பு குறித்த அறிவுரை: பிள்ளைகளை வளர்த்தெடுக்கப் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து பெரிய நிலைக்கு வந்தவுடன் பெற்றோரைப் புறக்கணிக்கும் கலாச்சாரம் கேரளாவில் இருக்கக் கூடாது; மாநிலத்தில் எந்தவொரு முதியவரும் தனிமையில் வாடக் கூடாது என்பதே தமது மிகப்பெரிய கனவு என முதலமைச்சர் வி.டி. சதீசன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    https://www.apcnewstamil.com/news/india/sabarimala-7-ayyappa-devotees-die-due-to-heart-related-issues/252762

MUST READ