Homeசெய்திகள்சினிமாமிஷ்கினுக்கு பெரிய டிமாண்ட் இருக்கு.... பேட்டியில் விஜய் சேதுபதி ஓபன் டாக்!

மிஷ்கினுக்கு பெரிய டிமாண்ட் இருக்கு…. பேட்டியில் விஜய் சேதுபதி ஓபன் டாக்!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் மிஷ்கின் குறித்து பேசி உள்ளார்.மிஷ்கினுக்கு பெரிய டிமாண்ட் இருக்கு.... பேட்டியில் விஜய் சேதுபதி ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் மிஷ்கின், தற்போது ‘பிசாசு 2’, ‘ட்ரெயின்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில், விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் மிஷ்கின் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது இது குறித்து விஜய் சேதுபதியிடம் பேட்டி ஒன்றில், “உங்களுக்கு நடிகர் மிஷ்கினைப் பிடிக்குமா அல்லது இயக்குநர் மிஷ்கினைப் பிடிக்குமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிஷ்கின், “அவர் என் படங்களைப் பார்த்ததில்லை” எனச் சிரித்தபடி பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, “சமீபத்தில் நான் ‘பரிமளா அண்ட் கோ’ படம் பார்த்தேன். அதேபோல் ‘சவரக்கத்தி’ படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியும் எனக்கு மிகவும் பிடிக்கும். அது மிகச் சிறப்பாக வந்திருக்கும். மேலும், அவரைப் படங்களில் நடிக்க சொல்லியும் நான் கேட்டிருக்கிறேன். அவரிடம் இயக்குவதற்கு நிறைய கதைகள் இருந்தாலும், நடிகர் மிஷ்கினுக்கு பெரிய டிமாண்ட் இருக்கிறது” என்று கூறினார்.மிஷ்கினுக்கு பெரிய டிமாண்ட் இருக்கு.... பேட்டியில் விஜய் சேதுபதி ஓபன் டாக்!மேலும், “இப்போது குணச்சித்திர நடிகர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள், அதனால் அவரைத் தொடர்ந்து படங்களில் நடிக்க சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நிறைய படங்களில் நடித்து, கொஞ்சம் பணம் சம்பாதித்துவிட்டு, அதன் பிறகு தனது அடுத்த படத்தை இயக்குமாறு அவரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்” என்றார். அப்போது, “அவர் பணம் சம்பாதித்தால், தனது சொந்தப் படத்தை எடுக்கத் தொடங்கிவிடுவாரா?” என்று கேட்கப்பட்டதற்கு, “இல்லை, நான் என் சொந்தப் படத்தை எடுக்க மாட்டேன்” என மிஷ்கின் பதிலளித்தார்.

MUST READ