Homeசெய்திகள்சட்டம்அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை முத்திரை – FSSAI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை முத்திரை – FSSAI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில், உடல்நலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துகள் குறித்த எச்சரிக்கை முத்திரைகளை இடம்பெறச் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை முத்திரை – FSSAI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உணவுப் பொருட்களில் அதிக அளவில் சேர்க்கப்படும் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ளிட்டவற்றால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3S and Our Health Society என்ற அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இதன்படி, உணவுப் பொருட்களில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகளுக்கான அளவு வரம்புகளை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ள ஒவ்வொரு ஊட்டச்சத்துக்கும் தனித்தனியாக அறுகோண வடிவிலான எச்சரிக்கை முத்திரை இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை முத்திரைகளில் சம்பந்தப்பட்ட ஊட்டச்சத்தைக் குறிக்கும் படத்துடன், ‘HIGH FAT’, ‘HIGH SUGAR’, ‘HIGH SALT’ என்ற வாசகங்களும் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு முத்திரையும் உணவுப் பாக்கெட்டின் முன்பக்கக் காட்சிப் பரப்பில் குறைந்தபட்சம் 4 முதல் 5 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோர் எளிதில் கவனிக்கும் வகையில் எச்சரிக்கை வாசகங்களின் எழுத்து அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். மொத்த சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு உள்ளிட்டவற்றையும் எச்சரிக்கை முத்திரை தொடர்பான விதிமுறைகளில் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளை நான்கு மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்றும் FSSAI-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறித்த புரிதலை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காகப் பள்ளிப் பாடத்திட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாடத்திட்ட மாற்றங்களுடன் சிறப்புப் பயிலரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் பாடத்திட்டம் சார்ந்த பிற செயல்பாடுகள் மூலமாகவும் மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த நடைமுறை அறிவை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உணவுப் பாக்கெட்டுகளின் முன்பக்கத்திலேயே எச்சரிக்கை விவரங்கள் இடம்பெறுவதன் மூலம், நுகர்வோர் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு முன்பே அவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அளவுகளை அறிந்து முடிவெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் தாமதத்தால் விமானத்தைத் தவறவிட்ட தம்பதி: ரூ.63,199 இழப்பீடு வழங்க ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

MUST READ