Homeசெய்திகள்சட்டம்கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் – தலைமைச் செயலாளருக்கு எந்தப்...

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் – தலைமைச் செயலாளருக்கு எந்தப் புகாரும் வரவில்லை என காவல்துறை விளக்கம்; நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் – தலைமைச் செயலாளருக்கு எந்தப் புகாரும் வரவில்லை என காவல்துறை விளக்கம்; நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்க அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர். த்ரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளருக்கும் எந்தப் புகாரும் வரவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா, இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

இதனால், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாகர்கோவிலில் ரயில் பெட்டியில் பெண் சடலமாக மீட்பு: 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

MUST READ