மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான நிஷாந்தை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல்துறை தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதையொட்டி, நிஷாந்த் மதுரை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த், தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் பல்வேறு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், நிஷாந்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு முன்பாக விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து, நிஷாந்தை மதுரை மத்திய சிறையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
