Homeசெய்திகள்சட்டம்திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டம் – வழக்கு...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டம் – வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி, நவம்பர் 22ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டம் – வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இதுதொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி, நவம்பர் 22ஆம் தேதி திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையம் அருகே அனுமதிக்கப்பட்ட இடத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்காகக் காவல்துறையினரிடம் அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், நவம்பர் 22ஆம் தேதி திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள மயில் மண்டபத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம் நடத்தவும், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி பழைய பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

அரசுத்தரப்பு விளக்கம்

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், மனுதாரர் கோரியுள்ள இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்றும், மாற்று இடத்தில் வேண்டுமானால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாகத் தகவல் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க கால அவகாசமும் கோரப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாள் விசாரணை: கல்தூண் தீபத்தூணா? எல்லைக்கல்லா? – நீதிபதிகள் சரமாரி கேள்வி!

MUST READ