Homeசெய்திகள்சட்டம்தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

-

- Advertisement -

தமிழகத்தில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதால், புதிதாக மதுபானக் கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பொதுநலன் கருதி மாநிலம் முழுவதும் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

திருச்சி மாவட்டம் நல்லம்பிள்ளை கிராமத்தில் உள்ள நவகிணத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய மதுபானக் கடையைத் திறக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, நவகிணத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஏற்கனவே தேவைக்கு அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாகக் கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டிய தேவை இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பொதுநலன் கருதி மாநிலம் முழுவதும் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பள்ளிக்கரணை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வுக்குக் கிடைத்த வெற்றி – சதுப்பு நிலங்களை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ