Homeசெய்திகள்சட்டம்முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் – சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்...

முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் – சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

-

- Advertisement -

தனியார் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தவும், DTCP அனுமதி பெற்றுத் தருவதாகவும் கூறி பணம் பெற்ற வழக்கில் சேர்க்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமாரை, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் – சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தவும், DTCP அனுமதி பெற்றுத் தருவதாகவும் கூறி, தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகி அரசகுமார் என்பவர், சங்ககிரியைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் தமிழ்மணியிடம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், உறுதியளித்தபடி எந்தப் பணியையும் செய்து தரவில்லை எனக் கூறி, பள்ளியின் தாளாளர் தமிழ்மணி சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் அரசகுமாரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமாரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று புழல் சிறைக்குச் சென்று முத்துக்குமாரைக் கைது செய்தனர். பின்னர் இன்று சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

அப்போது, முத்துக்குமாரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

MUST READ