விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழ் தற்போது நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி புகழ் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்பு டா என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். இருந்த போதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் புகழுக்கு புகழ் கிடைத்தது.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன் நகைச்சுவை திறமையால் அனைவரையும் கவர்ந்தவர்.
குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, பாலா இவர்கள் மூவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இவர்கள் மூவருமே தற்போது திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் புகழுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவர் அஜித்,சூர்யா சிவகார்த்திகேயன், அருண் விஜய்,ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அதை தொடர்ந்து, புகழ் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இவ்வாறாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் புகழ் தற்போது ‘கொற்றவன்’ எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து விபின் நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஓம் சதாசிவம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான கார்த்திக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படம் ஒரு மர்ம திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே இது தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


