நான் இனிமே குக் வித் கோமாளிக்கு இனி வரமாட்டேன் என்று சிவாங்கி தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது 4-வது சீசனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் பங்கேற்று அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார். குக் வித் கோமாளி 3 சீசன்களிலும் கோமாளியாக பங்கேற்று தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார் சிவாங்கி.
கோமாளியாக கலக்கிய சிவாங்கி தற்போது குக்- ஆக கலக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிவாங்கி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அதில் ஒருவர் “சிவாங்கி உங்களை நாங்கள் கோமாளியாக பார்த்தோம். இப்போது குக்-ஆக பார்க்கிறோம். இனி மறுபடியும் எப்போது கோமாளியாக பார்ப்போம்” என கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த சிவாங்கி “இதுதான் குக் வித் கோமாளியின் எனது கடைசி சீசன். நான் என் சிறந்ததை கொடுக்கவும் உங்களுடன் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சிவாங்கி அடுத்து என்ன நிகழ்ச்சி மூலம் எண்டெர்டெயின் செய்வார் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!