Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம்

-

- Advertisement -

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

gold price

அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது. இந்த அளவு தற்போது 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது. விலை சரிவை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினரும் தங்கத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைத்ததால் தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.44,560- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5,570-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ